4. இருள் இருந்தால்தானே ஒளி?

இருள் என்பது குறைந்த ஒளி.

மனத்தினுள் கருப்புவைத்த
மைபொதி விளக்கு.

இருளே உன்சீர்
ஓவியர் அறிந்திருப்பார்.
நீபோய்
தாமரை இதழ்களின் அடியில்
தப்புக்கட்டுகின்றாய்.
இருளும் ஒளியும்
சேர்த்து மெழுகும் வழிகள்.

உயிர்த்தெழும் ஒளிக்கு
இருள் ஒரு திரையா?
பாழாம் வெளியும்
படைப்பினை
வரையவோர் சுவரா?

கோடுகளின் புரிதல் நீட்சியாகி
வண்ணமாகப் பரவுகிறது.

"டிசைன்ஸ் பேட்டு நெசவுக்கு
ஒரு இருட்டு ஒரு வெளிச்சம்."

"இந்த பிளஸ் மைனஸ் தத்துவந்தான்
கம்ப்யூட்டருக்கே அடிப்படை."

இருளைப் புகவிடுகிற பொழுதிலேயே
ஒளியையும் தோற்றுவிப்பது எதுவோ?
அதுவே தாவோ.

இருள் இருந்தால்தானே ஒளி.

____________________
*பாரதி*சேக்கிழார்*பாரதிதாசன்*பிரேமிள்*
*ஆதிமூலம்*ஒரு நெசவாளி*ஆர்.எம்.கே.வி. விஸ்வநாதன்*
*பிரிட்ஜேஃப் காப்ரா*புதுமைப்பித்தன்*

Comments

Popular Posts

வே.மு. பொதியவெற்பன் நிகழ்த்திக் காட்டும் விமரிசன முறையியல்

‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’ தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்

2. தீதும் நன்றும் பிறர்தர வாரா.