3. எல்லாமாயும் உள்ள நான்

காலகாலமாய்க் காவுவாங்கிக்
காத்திருக்கிறாள் 'லவ்கீஹா'
அதிலும் கலைஞர்களிடம்
விளையாடுவ தென்றால்
கொள்ளை ஆசை அவளுக்கு.

ஆயினும் அறிவின் குருவே
ஞானிகள் கைஉதறிச் செல்வார்கள்

காரல் மார்க்ஸ் உயிர்நீப்பதும்
உயிர்த்தெழுவதும்
காலகால நிகழ்வு
தற்பொழுது அவருக்கு
மரண காலம்.

கேரளத்தில்
மார்க்ஸ் மரிச்சிட்டில்ல
மார்க்ஸிசம் ஜனிச்சிட்டில்ல

விடுபட்டுப்போன என் தத்துவமே
நீ உதறிவிட்டுப்போன
இளம் விரல்களால்
உன் சிஷ்யன் (மாணவன்)
அல்லது தோழன் உன்னை
மீண்டும் மீண்டும் எழுதுவான்.

ஏராளமான கருத்தியல் எதிராளிகள்
என்றாலும்
தனிப்பட்ட எதிரியென எவருமிலர்.

"Well Marx
Who is Marxist?"

"Well,
I don't know
But I'm not"

காந்தியம் என்று
ஒன்றும் கிடையாது
என்பேரால் நான்
எந்த மதத்தையும்
விட்டுப் போகவில்லை.

"புத்தர் என்றால் என்ன?"

"மூன்று பவுண்டு சணல்!"

"ஒரு நாய்க்குப்
புத்த இயல்பு உண்டா?"

"மியூ" "மியூ"

"And have grown
Nameless and immeasurable
No one I'm
I who am all that is."

_______________

*கீரனூர் ஜாகிர் ராஜா*ப.தேவேந்திர பூபதி*
*சிலேட்* *குஞ்ஞுண்ணி* *பிரடெரிக் ஏங்கல்ஸ்*
*காரல் மார்க்ஸ்* *காந்தி* *சென் கொவான்ஸ் (KOANS)*
*அரவிந்தர்*

Comments

Popular Posts

வே.மு. பொதியவெற்பன் நிகழ்த்திக் காட்டும் விமரிசன முறையியல்

‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’ தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்

2. தீதும் நன்றும் பிறர்தர வாரா.