Posts

Showing posts from November, 2008

பொதியவெற்பன் மணிவிழா நிதி--ஒரு வேண்டுகோள்

சமூக ஓர்மைப் பதிப்பாள முன்னோடியும், சமூக மனசாட்சியான பன்முக ஆளுமையுமான வே.மு.பொதியவெற்பனின் 'பொதிகை--60' மணிவிழா நிகழ்வுகள் 10.05.08 அன்று 'வம்சி புக்ஸ்' சார்பில் திருவண்ணாமலையிலும், 29.08.08 அன்று கலை இலக்கிய பெருமன்ற கிளை சார்பில் குடந்தையிலும் நடைபெற்றன. மணிவிழா குழு சார்பில் சக பயணியர் தோழமைக் கெளரவிப்பாகவும், மருத்துவநல பராமரிப்பிற்காகவும் (கார் விபத்தில் கால்பாதிப்பு) நிதி திரட்டப்படுகிறது. நிதியளித்து உதவ வேண்டுகிறோம். நிதியளிப்பு நிகழ்ச்சி தஞ்சையில் முக்கூடல் ஏற்பாட்டில் தமிழ்ப்பல்கலை அரண்மனை வளாகத்தில் 01.02.09 ஞாயிறு மாலை நடைபெற உள்ளது. தங்கள் பங்களிப்பினை அளித்து உதவுக. இங்ஙணம் ஞானி, அ.மார்க்ஸ், இன்குலாப், கல்விமணி, த.பழமலை, தொ.பரமசிவம், வீ.அரசு, சி.மோகன், திலீப் குமார், கால.சுப்பிரமணியன், நா.விச்வநாதன், எம்.ஜி.சுரேஷ், மு.ராமசாமி, இளமுருகன், பா.மதிவாணன் , அரங்க.சுப்பையா, சுதீர் செந்தில், தேவேந்திர பூபதி, ந.முருகேச பாண்டியன், பிரேம், ரமேஷ், மாலதி மைத்ரி, அரச.முருகுபாண்டியன், இரத்தின கரிகாலன், வேலு சரவணன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் புது எழுத்து, முக்கூடல், ட்ரீம

5. வெறுங்கையோடு வீடுதிரும்புபவன் நிழல்.

வேலைக்குக் கிளம்பும்போது அழுவதைத் தவிர்க்கவேண்டும். வெறுங்கையோடு திரும்பிவந்தால் வெகுளியாய்ச் சிரிக்கவேண்டும். வெறுங்கைகளுடன் திரும்பி கொண்டிருக்கிறீர்கள். சிறுமுயலும் கிடைக்காத இன்றைய வேட்டையை முடித்துக் கொண்டு. தொடர்ந்து ஐந்தாவது நாளாக இப்படி நேர்ந்திருக்கிறது. பாரம் துவளத் தளர்ந்த நடையோடு போகும் உங்களைப் பூதாகரமாய் பின் தொடர்ந்து வருகிறது அந்தி நிழல். "எப்படி வெறுங்கையோட போவ? இன்னா தாத்தா கொண்ணாந்தே?"ன்ற கேள்விக்கென்ன பதில் சொல்வேன்? சிறுங்கண்ணிக்குப் பறவைகளை அழைத்து அழைத்துச் சோர்ந்தான். சகல வித்தைகளும் பிரயோகிக்கப்பட்டுத் தோற்றுக்கொண்டிருந்தன. கண்ணியைச் சுருட்டக்கூட மனமின்றி நடந்தான். எட்டிப்போட்ட நடை தளர்ந்திருந்தது. தள்ளிப்போகத் தள்ளிப்போகப் பூதாகரமாய் முன்னால் விரிகிறது வெறுங்கையுடன் வீடு திரும்புபவனின் நிழல். (வேறு) நோய்மையில் இற்றுக் கொண்டிருக்கும் நைந்த வலைகள் என்னுடையவை. இந்தக்கடல் உருவானதில் இருந்து வலையெறிந்து கொண்டிருக்கிறேன். ஒரு மீனும் சிக்கியதில்லை இதுவரை. வலைகளின் மேல் நம்பிக்கை யிழந்தவன் பசியிலும் மூப்பிலும் தளர்ந்துபோய் சிறுதூண்டில் ஒன்றைத் தயாரித்துக் கொ

4. இருள் இருந்தால்தானே ஒளி?

இருள் என்பது குறைந்த ஒளி. மனத்தினுள் கருப்புவைத்த மைபொதி விளக்கு. இருளே உன்சீர் ஓவியர் அறிந்திருப்பார். நீபோய் தாமரை இதழ்களின் அடியில் தப்புக்கட்டுகின்றாய். இருளும் ஒளியும் சேர்த்து மெழுகும் வழிகள். உயிர்த்தெழும் ஒளிக்கு இருள் ஒரு திரையா? பாழாம் வெளியும் படைப்பினை வரையவோர் சுவரா? கோடுகளின் புரிதல் நீட்சியாகி வண்ணமாகப் பரவுகிறது. "டிசைன்ஸ் பேட்டு நெசவுக்கு ஒரு இருட்டு ஒரு வெளிச்சம்." "இந்த பிளஸ் மைனஸ் தத்துவந்தான் கம்ப்யூட்டருக்கே அடிப்படை." இருளைப் புகவிடுகிற பொழுதிலேயே ஒளியையும் தோற்றுவிப்பது எதுவோ? அதுவே தாவோ. இருள் இருந்தால்தானே ஒளி. ____________________ *பாரதி*சேக்கிழார்*பாரதிதாசன்*பிரேமிள்* *ஆதிமூலம்*ஒரு நெசவாளி*ஆர்.எம்.கே.வி. விஸ்வநாதன்* *பிரிட்ஜேஃப் காப்ரா*புதுமைப்பித்தன்*

3. எல்லாமாயும் உள்ள நான்

காலகாலமாய்க் காவுவாங்கிக் காத்திருக்கிறாள் 'லவ்கீஹா' அதிலும் கலைஞர்களிடம் விளையாடுவ தென்றால் கொள்ளை ஆசை அவளுக்கு. ஆயினும் அறிவின் குருவே ஞானிகள் கைஉதறிச் செல்வார்கள் காரல் மார்க்ஸ் உயிர்நீப்பதும் உயிர்த்தெழுவதும் காலகால நிகழ்வு தற்பொழுது அவருக்கு மரண காலம். கேரளத்தில் மார்க்ஸ் மரிச்சிட்டில்ல மார்க்ஸிசம் ஜனிச்சிட்டில்ல விடுபட்டுப்போன என் தத்துவமே நீ உதறிவிட்டுப்போன இளம் விரல்களால் உன் சிஷ்யன் (மாணவன்) அல்லது தோழன் உன்னை மீண்டும் மீண்டும் எழுதுவான். ஏராளமான கருத்தியல் எதிராளிகள் என்றாலும் தனிப்பட்ட எதிரியென எவருமிலர். "Well Marx Who is Marxist?" "Well, I don't know But I'm not" காந்தியம் என்று ஒன்றும் கிடையாது என்பேரால் நான் எந்த மதத்தையும் விட்டுப் போகவில்லை. "புத்தர் என்றால் என்ன?" "மூன்று பவுண்டு சணல்!" "ஒரு நாய்க்குப் புத்த இயல்பு உண்டா?" "மியூ" "மியூ" "And have grown Nameless and immeasurable No one I'm I who am all that is." _______________ *கீரனூர் ஜாகிர் ராஜா*ப.தேவேந்திர பூபதி* *சி

2. தீதும் நன்றும் பிறர்தர வாரா.

இன்று செய்யவிருப்பதை நாளை செய்யலாம் அதாவது எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். செய்யாமற் போனாலும் சிறிதும் தவறில்லை. ஒல்லுவது ஒல்லும் என்றலும் யார்க்கும் ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும் ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே. செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து இல்லாளின் ஊடிவிடும். மேகம் திரண்டால் மழை பூமி தந்தால் போகம் ஆனால் ஒன்று சுயபோகம் முப்போகம் விளைச்சலைப் போகமெனச் சொல்லும் மொழி பெண்ணாகி இருப்பதன்றி வேறு வழியில்லை. _______ *கணியன் பூங்குன்றனார்* *நம்பி*ஆவூர் மூலங்கிழார்* ரமேஷ் :பிரேம்*

கொல்லாஜ் மாண்டேஜ் கவிதைகள்

{இவை கூட்டுக்கவிதைகள் அல்ல. கொல்லாஜ் மாண்டேஜ் கவிதைகள். இவற்றில் தலைப்பு உட்பட ஒரு வரிகூட என்னுடையதில்லை. 'எடிட்'டிங்கும் 'அசெம்ப்ளேஜ்'ஜும் மட்டுமே என் கைங்கர்யம். ஆதித்தச்சன் பிரிகோலருக்கும் 'செல்லுலாய்டு மயன்' ஐசன்ஸ்டீனுக்கும் நன்றி சொல்லி....} 1. எழுதத் தவறிய என்கவிதை எதுஎது எதனெதன் எதுஎதுவோ அதுஅது அதனதன் அதுஅதுவே எழுது உனது கவிதையை நீயே எழுது உனது கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்றென்னைக் கேட்காதே. நகுலனைப் போல் என்னால் எழுதமுடியாது என்னை மாதிரி எழுத மாட்டார் நகுலன். இதைப்போல ... எதுவும் இல்லை எதைப்போலும். என் கவிதையை நான் தான் எழுதவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏதுமில்லை. எல்லாவற்றிலும் என்கவிதையை அல்லது நான் எழுதத் தவறிய கவிதைகளைக் காண்கிறேன். ______ *வாவா அபின்*பசுவய்யா *பார்கவ நம்பி*Non-being*நகுலன்*

வெட்டவெளிதான் என் ஞானம்

தன்னியல்பாய்ப் பாயும் நதிகள் தான்தோன்றியாய்ப் பூக்கும் பூக்கள் சென்னியல்பாய் வாழுமென் சித்தம் சித்தம்போக்கே சிவம்ம்ம் போக்காய் *** மடியில் எனக்குக் கனமில்லை வழியில் எதற்கும் பயமில்லை தலையில் எனக்கு கனமில்லை தடைக்கல் யாவும் படிக்கல்லே! *** நாற்றைப் பறித்துநட் டாற்போல் வேற்று நிலத்தும்வேர் பிடிப்பேன் ஊற்றுக் கண்ணாய் மடைதிறந்(து) உலக லாவிடுமென் பயணம் மன்பதை எதிரியர் என்னெதிரி மானுடந் தழுவிடில் சகபயணி என்பதைச் சொல்வதே என்வாழ்க்கை இருப்பே சிம்மசொப் பனமாய் யாது மாகிநிற் பதனால் யாரா யுமேநா னில்லை தீதும் நன்றுந்தர வாரா திருவில் நின்றதென் செம்மை மண்ணி லூன்றியென் பாதம் வெட்ட வெளிதானெண் ஞானம் பண்ணி லூறியதென் கானம் பரவ சத்தினதி மோனம்

பொதிகைச்சித்தர் கவிதை வெளி

(கொஞ்சம் பாடல்...கொஞ்சம் கவிதை) தன்னையறிந் தின்பமுற தத்தத்தரி கிடதோம் சித்தக்கடல் முத்துக்குளி தத்தத்தரி கிடதோம் திரைபோட்ட காமாலை தத்தத்தரி கிடதோம் பனிமூட்டந் தாழ்விலகும் தத்தத்தரி கிடதோம் சுதந்திரக் காற்றினிலே தத்தத்தரி கிடதோம் திகம்பரக் கூத்தாடும் தத்தத்தரி கிடதோம் தக்கதிமி தக்கதிமி தத்தத்தரி கிடதோம் திக்குத்திகு திக்குத்திகு தத்தத்தரி கிடதோம் (வேறு) எத்தைத் தின்றால் பித்தந் தீரும் தத்தத்தரி கிடதோம் சித்தம்போக்கே சிவம்ம்ம் போக்கு தத்தத்தரி கிடதோம்

எம் பாடு...

Image
கைவிரல் நுனியினில் கணினியின் திரையினில் கனவுகள் மெய்ப்பட(ல்)வேண்டும் தகவலின் சாலையில் தமிழர்தம் மெய்ப்பொருள் திசைமுகந் தழுவிட(ல்)வேண்டும் முரண்படு நோக்குகள் அதனதன் போக்கினில் திறம்பட வீற்றிட(ல்) வேண்டும் பன்னருங் கலைநலம் மின்னம் பலந்தனில் இன்னமும் பொலிந்திட(ல்) வேண்டும் "People's Poetry Thy name is Pablo Neruda! Oh! the dynamic unique voice Of the downtrodden mass -of these universe Red-Morning Comrade! Red-Morning Poet Laurat!" -Chilikkuyil Bookventure.