Posts

Showing posts from May, 2013

‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’ தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்

‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’ தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும் வே.மு.பொதியவெற்பன்         நடுவண் அரசு தமிழுக்கான செவ்வியல் அங்கீகாரத்தை வழங்கியதை யொட்டி அதற்கெனச் செம்மொழித் தமிழாய்வு மைய நிறுவனத்தையும் ஏற்படுத்தியது. அந்நிதி நிறுவன நல்கையில் பல்களை வளாகங்களிலும், கலை இலக்கியப் பண்பாட்டு அமைப்புகள் வாயிலாகவும் இதழைத் தொடர்ந்து ரவிக்குமார் ‘மணற்கேணி’ சார்பில் புதுவைப் பல்கலையுடன் இணைந்து இன்றைய தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் ‘தமிழும் சமஸ்கிருதமும்’ குறித்த ஆய்வரங்குகளை நிகழ்த்தி ஆய்வுக் கட்டுரைகளை மணற்கேணியிலும் வெளிவிட்டார்.     சமஸ்கிருதம் பிராந்திய அடையாள அரசியல் எழுச்சி பெற்ற போது தனது முக்கியத்துவத்தை இழக்க நேர்ந்தது. சமஸ்கிருதத்தைப் பிராமணர்களோடு சமமாக வைத்துப் பார்த்த காரணத்தால்  சமஸ்கிருதப்படிப்பு என்பதே கேவலமானதாக, அவமானகரமானதாக ஆக்கப்பட்டு விட்டது என்று பொல்லாக் கருதுகிறார். ஆனால் இப்படியான சமஸ்கிருத எதிர்ப்பு எழுவதற்கு வரலாற்று ரீதியாக இருக்கும் காரணங்களைப் பொல்லாக் பிரிக்கத் தவறுகிறார் என்று தோன்றுகிறது. வெல்டன் பொல்லாக், ஹெர்மன் டீக்கன் ஆகியோரின் சங்க இலக்கியம் குறித்த விமர்சனங்கள்