Posts

Showing posts from May, 2010

’திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்’ மீதான ஒரு மருத்துவப் பரிசோதனை அறிக்கை

துயரர் 1: ஜெயமோகன் அறிகுறி மற்றும் உபவிளைவுகள்: 1. காயம்பட்ட வைதிக மன உடைசல் வெளிப்பாடுகள் 2. தானியத்தைப் பதர்தூற்றி வேறு பிரிக்கொணா அளவிற்குக் கருத்துக்குருடு மற்றும் குருதியில் தோய்ந்த காமாலை 3. விழித்திரை மறைக்கும் அளவிற்கு அகமலம். 4. சித்தக்கட்டமைப்பின் காழ்ப்பினால் மீதூரும் 4.1 சுருக்கிக்கோடல் 4.2 விலக்கித்தள்ளல் 4.3 தொடர்பறுத்தல் 5. இவற்றால் ஏற்படும் 5.1 வெறுப்பு 5.2 எரிச்சல். 5.3. கோபம் தீர்வு: குணப்படுத்த இயலாவண்ணம் முற்றிய கையறு நிலை துயரர் 2: தமிழவன் அறிகுறி மற்றும் விளைவுகள் 1. அமைப்பியல் மீமெய்யியல் உருவெளித் தோற்ற மாயைகள் 2. ஆடியில் தோன்றும் பிரதிபிம்பம் போல எதுவும் இடவல மாற்றமாகவும் தொலைவண்மைத் தோற்றமயக்கங்களாகவுமே காணக்கிடத்தல் 3. கீழைக்கொடையினையும் கூட மேலைக் கொடையாகவே காணும் 'காலனிய மனோபாவம்' 4. உண்மைகளை அவற்றின் இன்மை வரை ஊடுருவிக் காண முற்படாமல் இடைக்கண் முறிதல் தீர்வு: விடுபட்டாற்போலத் தோன்றினும் பூரண குணமாகாமல் விட்டுவிட்டு மிச்ச சொச்சமாய்த் தலை நீட்டும் நோய்க்கூற்று எச்சங்களை வேரறக் களைய அல்லோபதி தவிர்த்து ஹோமியோபதியினை ஏற்கவும். 'பிஸியோதெரபி' பிரி