Posts

Showing posts from 2013

புனைவுகளாகவும் வாசிக்கமுடியும் விமர்சனக்கட்டுரைகளின் அழகியல்

கண்ணகன் “ எத்தனை எத்தனையோ சிந்தனைப்பள்ளிகள் ; எத்தனை எத்தனையோ கவிதைப்பள்ளிகள் ; எத்தனை எத்தனையோ செல்நெறிகள் . ஆனால் இங்கே தத்தம் இயக்கச்சார்பு   மற்றும் செல்நெறிச்சார்புகளை மட்டுமே முன்னிறுத்தி ஏனிந்த நிராகரிப்பின் அரசியல் ? பெருங்கதையாடல்களின் தகர்வினை முன்னிறுத்தும் இந்தப் பின்னைநவீனத்துவ ஊழியில் அப்படி என்ன இந்த நவீனகவிதைப் பிதாமகன்களின் ஏகசக்ராதிபத்தியங்கள் ? அழகியலின் பேரால் இது இங்கு நிகழ்த்தப்படும் கவிதை அரசியல்தானே . அனைவருக்கும் பொதுவான அழகியல்நியதி என்பது மட்டும் எப்படி சாத்தியப்படும் - வே . மு . பொதியவெற்பன்    எமது ஆய்வுச்சூழலில் கோட்பாடுகளை முன்வைத்து வெளிவரும் நூல்களை , தனித்த அளவில் கோட்பாடுகளை மட்டும் முதன்மைப்படுத்தி விளக்கிச் செல்வனவாகவும், கோட்பாடுகளை அடிப்படை அணுகுமுறைகளாகக் கொண்டு பிரதிகளை ஆய்விற்குட்படுத்தவனவாகவும் இரு நிலைகளில் அடையாளங்காணமுடியும் . படைப்பாக்க நெறிமைகள் குறித்தோ திறனாய்வு அளவீடுகள் குறித்தோ தேவையாய் இருக்கும், இத்தகைய பகிர்வுப்புல பொதுமைத்தன