Posts

Showing posts from March, 2012

சி.மணி கவிதைகளில் மரபின் தாக்கமும் புத்தாக்கமும் ( பகுதி 3 )

டி . எஸ் . எலியட் என்ன படித்திருக்கின்றாரோ அவற்றை எல்லாம் படிக்கவில்லையெனில் ‘ பாழ்நில ’ த்தைப் புரிந்து கொள்ள முடியாதென சி . மணி குறிப்பிடுவது போலவே சி . மணியின் பன்முகப் பரிமாணங்கள் பல்வேறு ஈடுபாடுகள் எத்தகையன என்றெல்லாம் புரிந்துகொண்டாலன்றி அவரது கவிதைகள் பற்றிய போதுமான புரிதல் வாய்த்திடச் சாத்தியமில்லை . ஏனெனில் அவற்றை எல்லாமும் அவரது கவிதைகளுக்கூடாகவே அவர் கவித்துவ இழையறாமல் ஊடுபாவாக இழையோட வைத்துள்ளார் . “ நவீனகவியானவன் எவ்வாறு வெறும் மொழியறிவை, கற்பனையை , கவிப்புனைவைத் தாண்டி , அறிவியல் , வரலாறு, விண்ணியல் , மனோதத்துவம் , மருத்துவம் , உடற்கூறியல் , இசை , ஓவியம் , விளையாட்டு , தொன்மங்கள் , வேதாந்தங்கள் , சித்தாந்தங்கள் , தத்துவ ஞானங்கள் , அதற்கு அப்பால் இயங்கிக்கொண்டிருக்கும் சகலத்தையும் தெரிந்திருக்க வேண்டியவனாகின்றான் . அத்தனையும் சாத்தியம்தானா என்பது சி . மணியைப் பார்த்ததும் எனக்கு ஆமாம் என்று தோன்றியது ” - சாகிப்கிரான் 48 “ நீ கவிதை எழுதுவதும் / அவன் மலம் எடுப்பதும் மதிப்பீட்டில் வேறானாலும் / வகையால்