2. தீதும் நன்றும் பிறர்தர வாரா.

இன்று செய்யவிருப்பதை
நாளை செய்யலாம்
அதாவது
எப்பொழுது வேண்டுமானாலும்
செய்யலாம்.

செய்யாமற் போனாலும்
சிறிதும் தவறில்லை.

ஒல்லுவது ஒல்லும் என்றலும்
யார்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும்
இரண்டும்
ஆள்வினை மருங்கின்
கேண்மைப் பாலே.

செல்லான் கிழவன்
இருப்பின்
நிலம் புலந்து
இல்லாளின் ஊடிவிடும்.

மேகம் திரண்டால் மழை
பூமி தந்தால் போகம்
ஆனால் ஒன்று

சுயபோகம் முப்போகம்
விளைச்சலைப்
போகமெனச் சொல்லும் மொழி
பெண்ணாகி இருப்பதன்றி
வேறு வழியில்லை.
_______
*கணியன் பூங்குன்றனார்*
*நம்பி*ஆவூர் மூலங்கிழார்*
ரமேஷ் :பிரேம்*

Comments

Popular Posts

வே.மு. பொதியவெற்பன் நிகழ்த்திக் காட்டும் விமரிசன முறையியல்

‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’ தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்