பொதியவெற்பன் மணிவிழா நிதி--ஒரு வேண்டுகோள்
சமூக ஓர்மைப் பதிப்பாள முன்னோடியும், சமூக மனசாட்சியான பன்முக ஆளுமையுமான வே.மு.பொதியவெற்பனின் 'பொதிகை--60' மணிவிழா நிகழ்வுகள் 10.05.08 அன்று 'வம்சி புக்ஸ்' சார்பில் திருவண்ணாமலையிலும், 29.08.08 அன்று கலை இலக்கிய பெருமன்ற கிளை சார்பில் குடந்தையிலும் நடைபெற்றன. மணிவிழா குழு சார்பில் சக பயணியர் தோழமைக் கெளரவிப்பாகவும், மருத்துவநல பராமரிப்பிற்காகவும் (கார் விபத்தில் கால்பாதிப்பு) நிதி திரட்டப்படுகிறது. நிதியளித்து உதவ வேண்டுகிறோம். நிதியளிப்பு நிகழ்ச்சி தஞ்சையில் முக்கூடல் ஏற்பாட்டில் தமிழ்ப்பல்கலை அரண்மனை வளாகத்தில் 01.02.09 ஞாயிறு மாலை நடைபெற உள்ளது. தங்கள் பங்களிப்பினை அளித்து உதவுக. இங்ஙணம் ஞானி, அ.மார்க்ஸ், இன்குலாப், கல்விமணி, த.பழமலை, தொ.பரமசிவம், வீ.அரசு, சி.மோகன், திலீப் குமார், கால.சுப்பிரமணியன், நா.விச்வநாதன், எம்.ஜி.சுரேஷ், மு.ராமசாமி, இளமுருகன், பா.மதிவாணன் , அரங்க.சுப்பையா, சுதீர் செந்தில், தேவேந்திர பூபதி, ந.முருகேச பாண்டியன், பிரேம், ரமேஷ், மாலதி மைத்ரி, அரச.முருகுபாண்டியன், இரத்தின கரிகாலன், வேலு சரவணன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் புது எழுத்து, முக்கூடல், ட்ரீம...