Posts

Showing posts from December, 2008

1-----2-----3

Image
அன்றந்தப் புரவி வந்துபோனது அதுவொன்றும் சாதாரணப் புரவியில்லை. அடிவானுக்கு அப்பாலும் கொடிபறக்கும் பரதகண்ட சாம்ராஜ்யத்தின் அசுவமேதயாக வெள்ளோட்டத் திக்விஜயம். சப்தநாடிகளும் உள்ளொடுங்கச் சகலமரியாதை செலுத்திக் குற்றேவல் புரிந்தே குறுகி நின்றனர் குறுநில மன்னர். நேற்றிந்தக் கப்பல் வந்துபோனது இதுவும் ஒன்றும் சாதாரணக் கப்பலில்லை உலகெலாம் ஒருகுடைக்கீழ் ஆளவே உன்மத்தம் கொண்டலையும் ஸாமுமாமா சாம்ராஜ்யப் பெண்டகன் கழுகின் செட்டைகள் விரிக்கும் திக்விஜயம். பரிபூர்ண சரணாகதியாய்ச் சிவப்புக் கம்பளம் விரித்தன மைய மாநில அரசுகள். அன்றந்தச் சோழசாம்ராஜ்ய ராஜராசேச்சுரத்துச் சிவதாசியர் முலைக்குவட்டில் பொறிக்கப் பட்டிருந்தோ சூலக்குறி. திருக்கோயில் தலமெங்கும் உழவாரம் ஏந்தியே பணிசெய்து கிடந்தார் அப்பரும். நேற்றிந்தத் தமிழ்மண்ணில் தரையிறங்கித் துப்புரவுப்பணி துலக்கிக் கலமீண்டதும் கப்பல்வீரர் இந்திரியசுத்தி இளைப்பாற உடன்போந்த அயலகத் தாசியர் முலைக்குவட்டில் பொறிக்கப் பட்டிருந்ததோ கழுகுக்குறி. அன்றந்தப் புரவிமீண்ட புழுதிப்படலம் ஓய்ந்ததும் எழுந்தது புகைப்படலம் ஆயிரமாயிரம் தீநாக்கெழ அசுவமேதயாக ஆகுதியில் அவிர்ப்பலி ஆனதெல்லா...

உருமறைந்த திருக்கூத்தில்.....

Image

6. தாண்டவ மண்டலம்.

கால்பேரில் பாதாளம் பேரும் கைபேரில் திசைகள் எட்டும் பேரும் அடிகாள் அறிந்தாடும் ஆற்றாது அரங்கு. தாளம் பெருகித் திசையெலாம் ஒலிக்க வானும் மண்ணும் மேல்கீழாய்ச் சுழல திசைகளில் அடித்து விரிசடை மீளக் காலின் கீழே புவனங்கள் அதிர கைகள் அசைந்து வேற்றுக் கிரகங்கள் தீண்ட உன் தாண்டவம் நிகழும்போது என்னே விந்தை என் ஈச! நீயற்ற இடத்திலும் உன் தாண்டவம் நிறைந்த மாயை. நடனமாடும் கடவுள் இயற்பியல் கொள்கை இவையிரண்டும் மனத்தின் படைப்புகளே. தம்மை ஆக்கியோரின் மெளனம் பற்றிய உள்ளுணர்வு விவரிக்கும் வடிவமைப்புகள். பதஞ்சலி அறியா யோகம் நீ! புள்ளியில் மயங்கும் பம்பரம் உலகம். நீ ஆடவில்லை நான் காணவில்லை நடனம் ஆடிற்று இரண்டு கண்கள் பிரதிபலித்தன கவிதை இசை முதலான இதுகாறும் உள்ள எல்லாக் கலைகளினதும் மேதைகள் எல்லோரும் கூடித் தலைகவிழ்ந்து நிற்க அவள் தொடர்ந்து நடனம் ஆடிக் கொண்டிருந்தாள். நினைப் புணர்ந்த மயக்கத்தில் தலைகோதும் அன்னை இதழ்களில் குறுஞ்சிரிப்பு. ஆடிமுடித்து நிற்பவளின் களங்கமற்ற பூமுகத்தில் இவை எதனையுமே அறிந்திரா வியத்தகு குழந்தைமை எந்தக்கவி மேதைமையையும் வெட்கிக்கூசிக் கதறி மயங்கிவிடச்செய்யும் பிரகாசம். சுழலும் சுழலுள் ...