சிந்திப்பது படைப்பதற்கே - அதைத் தவிர வேறு படைப்பேதுமில்லை – ஆனால் முதலாவதாக படைத்தல் எனபது சிந்தனையில் ”சிந்திப்பதை” தோற்றுவிப்பதே. - டெல்யுஸ் (Difference and Repetition, 147) [1] அரசியல்இலக்கியம் எழுதுவது ஒருவகை என்றால் இலக்கியத்தின் அரசியலை எழுதுவது பிறிதொருவகை. தோழர் பொதி தொடர்ந்து இலக்கியத்தின் அரசியலை எழுதிக்கொண்டிருப்பவர். எந்த பீட உருவாக்கத்தையும் அதன் அடிமடியில் அடித்துத் தகர்ப்பதும், பீடங்களற்ற இலக்கியஆக்கம் பற்றிய அவாவுமே இத்தொகுப்பில் நாம் வாசிக்கும் கட்டுரைகளின் அடிப்படை. கடந்த 30 ஆண்டுகளில் தோழர் பொதியவெற்பன் அவர்கள் தொடர்ந்து இதனைத் தனது தனித்துவமான இலக்கியச் செயல்பாடாக வரித்துக் கொண்டுள்ளார். தோழரை 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும். 12-ஆம் வகுப்பு படித்த காலத்தில் (1981-82) நாங்கள் நடத்திய ’ஜனகனமன’ என்ற உருட்டச்சிதழை அவர் நடத்திவந்த ’முனைவனு’-க்கு அனுப்பியபின் ஒருநாள் அவரைச் சந்தித்ததில் துவங்கியது நட்பு. இலக்கியவாசகனாக அவரிடம் கற்றது பல. குடந்தை கல்லூரியில் படித்த அடுத்த மூன்று ஆண்டுகளிலும் தினமும் அவரைச் சந்திப்பதும் இலக்கியம், அரசியல், சிறுபத்திரிக்கை, வா