சி.மணி கவிதைகளில் மரபின் தாக்கமும் புத்தாக்கமும் ( பகுதி 2 )
ம ற்றொரு பக்கத்தில் மரபுமார்க்சியர்களின் தரப்பில் சி . மணியின் ‘ நரகம் ’ மீதான குறுக்கீடுகளை இனிக்காண்போம் . ஒரு படைப்பாளி தன்மைஒருமைக்கூற்றாக பாத்திரம் அல்லது நிகழ்வுப்போக்கைச் சித்திரிக்க நேர்கையில் பாத்திரத்தின் கருத்தினையே படைப்பாளியின் கருத்தென மயங்க இடமாகின்றது . இதுபற்றிப் பேசுமுகமாகவே “ அவர்கள் ஆசிரியனுடைய சிந்தனையின் தூதுவர்கள் எனமயங்குவது இலக்கிய அறியாமையே ” 21 எனக் கடிந்துரைப்பார் ஏங்கல்ஸ் . ஆனால் இத்தகைய குறுக்கீடு ஒன்று பேரா . நா . வானமாமலையாலேயே சி . மணி மீது முன்னிறுத்தப்பட்டதும் முரண்நகையே எனலாம் . நரகம் கவிதையை முன் வைத்து “ இக்காட்சிகளில் பிரவகித்த தாரையோடு கவிஞர் வீட்டிற்கு வருகிறார் ” 22 எனத் தம் கட்டுரையில் எழுதிச் சென்றார் நா . வா . இதற்கு எதிர்வினையாக சி . மணியின் கடிதம் ஒன்றும் அவர் கட்டுரை வெளியான ‘ தாமரை ’ இதழிலேயே வெளியானது . நா . வா . வும் தொடர்ந்தார். இவ்விவாதத் தரப்புகளைக் காண்போம் . “ அவருடைய ( நா . வா ) விளக்கம் முழுவதும் இவ்வாறே அமைந்துள்ளது . இப்படிப் பொருள் கொள்வத...