Posts

1-----2-----3

Image
அன்றந்தப் புரவி வந்துபோனது அதுவொன்றும் சாதாரணப் புரவியில்லை. அடிவானுக்கு அப்பாலும் கொடிபறக்கும் பரதகண்ட சாம்ராஜ்யத்தின் அசுவமேதயாக வெள்ளோட்டத் திக்விஜயம். சப்தநாடிகளும் உள்ளொடுங்கச் சகலமரியாதை செலுத்திக் குற்றேவல் புரிந்தே குறுகி நின்றனர் குறுநில மன்னர். நேற்றிந்தக் கப்பல் வந்துபோனது இதுவும் ஒன்றும் சாதாரணக் கப்பலில்லை உலகெலாம் ஒருகுடைக்கீழ் ஆளவே உன்மத்தம் கொண்டலையும் ஸாமுமாமா சாம்ராஜ்யப் பெண்டகன் கழுகின் செட்டைகள் விரிக்கும் திக்விஜயம். பரிபூர்ண சரணாகதியாய்ச் சிவப்புக் கம்பளம் விரித்தன மைய மாநில அரசுகள். அன்றந்தச் சோழசாம்ராஜ்ய ராஜராசேச்சுரத்துச் சிவதாசியர் முலைக்குவட்டில் பொறிக்கப் பட்டிருந்தோ சூலக்குறி. திருக்கோயில் தலமெங்கும் உழவாரம் ஏந்தியே பணிசெய்து கிடந்தார் அப்பரும். நேற்றிந்தத் தமிழ்மண்ணில் தரையிறங்கித் துப்புரவுப்பணி துலக்கிக் கலமீண்டதும் கப்பல்வீரர் இந்திரியசுத்தி இளைப்பாற உடன்போந்த அயலகத் தாசியர் முலைக்குவட்டில் பொறிக்கப் பட்டிருந்ததோ கழுகுக்குறி. அன்றந்தப் புரவிமீண்ட புழுதிப்படலம் ஓய்ந்ததும் எழுந்தது புகைப்படலம் ஆயிரமாயிரம் தீநாக்கெழ அசுவமேதயாக ஆகுதியில் அவிர்ப்பலி ஆனதெல்லா...

உருமறைந்த திருக்கூத்தில்.....

Image

6. தாண்டவ மண்டலம்.

கால்பேரில் பாதாளம் பேரும் கைபேரில் திசைகள் எட்டும் பேரும் அடிகாள் அறிந்தாடும் ஆற்றாது அரங்கு. தாளம் பெருகித் திசையெலாம் ஒலிக்க வானும் மண்ணும் மேல்கீழாய்ச் சுழல திசைகளில் அடித்து விரிசடை மீளக் காலின் கீழே புவனங்கள் அதிர கைகள் அசைந்து வேற்றுக் கிரகங்கள் தீண்ட உன் தாண்டவம் நிகழும்போது என்னே விந்தை என் ஈச! நீயற்ற இடத்திலும் உன் தாண்டவம் நிறைந்த மாயை. நடனமாடும் கடவுள் இயற்பியல் கொள்கை இவையிரண்டும் மனத்தின் படைப்புகளே. தம்மை ஆக்கியோரின் மெளனம் பற்றிய உள்ளுணர்வு விவரிக்கும் வடிவமைப்புகள். பதஞ்சலி அறியா யோகம் நீ! புள்ளியில் மயங்கும் பம்பரம் உலகம். நீ ஆடவில்லை நான் காணவில்லை நடனம் ஆடிற்று இரண்டு கண்கள் பிரதிபலித்தன கவிதை இசை முதலான இதுகாறும் உள்ள எல்லாக் கலைகளினதும் மேதைகள் எல்லோரும் கூடித் தலைகவிழ்ந்து நிற்க அவள் தொடர்ந்து நடனம் ஆடிக் கொண்டிருந்தாள். நினைப் புணர்ந்த மயக்கத்தில் தலைகோதும் அன்னை இதழ்களில் குறுஞ்சிரிப்பு. ஆடிமுடித்து நிற்பவளின் களங்கமற்ற பூமுகத்தில் இவை எதனையுமே அறிந்திரா வியத்தகு குழந்தைமை எந்தக்கவி மேதைமையையும் வெட்கிக்கூசிக் கதறி மயங்கிவிடச்செய்யும் பிரகாசம். சுழலும் சுழலுள் ...

பொதியவெற்பன் மணிவிழா நிதி--ஒரு வேண்டுகோள்

சமூக ஓர்மைப் பதிப்பாள முன்னோடியும், சமூக மனசாட்சியான பன்முக ஆளுமையுமான வே.மு.பொதியவெற்பனின் 'பொதிகை--60' மணிவிழா நிகழ்வுகள் 10.05.08 அன்று 'வம்சி புக்ஸ்' சார்பில் திருவண்ணாமலையிலும், 29.08.08 அன்று கலை இலக்கிய பெருமன்ற கிளை சார்பில் குடந்தையிலும் நடைபெற்றன. மணிவிழா குழு சார்பில் சக பயணியர் தோழமைக் கெளரவிப்பாகவும், மருத்துவநல பராமரிப்பிற்காகவும் (கார் விபத்தில் கால்பாதிப்பு) நிதி திரட்டப்படுகிறது. நிதியளித்து உதவ வேண்டுகிறோம். நிதியளிப்பு நிகழ்ச்சி தஞ்சையில் முக்கூடல் ஏற்பாட்டில் தமிழ்ப்பல்கலை அரண்மனை வளாகத்தில் 01.02.09 ஞாயிறு மாலை நடைபெற உள்ளது. தங்கள் பங்களிப்பினை அளித்து உதவுக. இங்ஙணம் ஞானி, அ.மார்க்ஸ், இன்குலாப், கல்விமணி, த.பழமலை, தொ.பரமசிவம், வீ.அரசு, சி.மோகன், திலீப் குமார், கால.சுப்பிரமணியன், நா.விச்வநாதன், எம்.ஜி.சுரேஷ், மு.ராமசாமி, இளமுருகன், பா.மதிவாணன் , அரங்க.சுப்பையா, சுதீர் செந்தில், தேவேந்திர பூபதி, ந.முருகேச பாண்டியன், பிரேம், ரமேஷ், மாலதி மைத்ரி, அரச.முருகுபாண்டியன், இரத்தின கரிகாலன், வேலு சரவணன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் புது எழுத்து, முக்கூடல், ட்ரீம...

5. வெறுங்கையோடு வீடுதிரும்புபவன் நிழல்.

வேலைக்குக் கிளம்பும்போது அழுவதைத் தவிர்க்கவேண்டும். வெறுங்கையோடு திரும்பிவந்தால் வெகுளியாய்ச் சிரிக்கவேண்டும். வெறுங்கைகளுடன் திரும்பி கொண்டிருக்கிறீர்கள். சிறுமுயலும் கிடைக்காத இன்றைய வேட்டையை முடித்துக் கொண்டு. தொடர்ந்து ஐந்தாவது நாளாக இப்படி நேர்ந்திருக்கிறது. பாரம் துவளத் தளர்ந்த நடையோடு போகும் உங்களைப் பூதாகரமாய் பின் தொடர்ந்து வருகிறது அந்தி நிழல். "எப்படி வெறுங்கையோட போவ? இன்னா தாத்தா கொண்ணாந்தே?"ன்ற கேள்விக்கென்ன பதில் சொல்வேன்? சிறுங்கண்ணிக்குப் பறவைகளை அழைத்து அழைத்துச் சோர்ந்தான். சகல வித்தைகளும் பிரயோகிக்கப்பட்டுத் தோற்றுக்கொண்டிருந்தன. கண்ணியைச் சுருட்டக்கூட மனமின்றி நடந்தான். எட்டிப்போட்ட நடை தளர்ந்திருந்தது. தள்ளிப்போகத் தள்ளிப்போகப் பூதாகரமாய் முன்னால் விரிகிறது வெறுங்கையுடன் வீடு திரும்புபவனின் நிழல். (வேறு) நோய்மையில் இற்றுக் கொண்டிருக்கும் நைந்த வலைகள் என்னுடையவை. இந்தக்கடல் உருவானதில் இருந்து வலையெறிந்து கொண்டிருக்கிறேன். ஒரு மீனும் சிக்கியதில்லை இதுவரை. வலைகளின் மேல் நம்பிக்கை யிழந்தவன் பசியிலும் மூப்பிலும் தளர்ந்துபோய் சிறுதூண்டில் ஒன்றைத் தயாரித்துக் கொ...

4. இருள் இருந்தால்தானே ஒளி?

இருள் என்பது குறைந்த ஒளி. மனத்தினுள் கருப்புவைத்த மைபொதி விளக்கு. இருளே உன்சீர் ஓவியர் அறிந்திருப்பார். நீபோய் தாமரை இதழ்களின் அடியில் தப்புக்கட்டுகின்றாய். இருளும் ஒளியும் சேர்த்து மெழுகும் வழிகள். உயிர்த்தெழும் ஒளிக்கு இருள் ஒரு திரையா? பாழாம் வெளியும் படைப்பினை வரையவோர் சுவரா? கோடுகளின் புரிதல் நீட்சியாகி வண்ணமாகப் பரவுகிறது. "டிசைன்ஸ் பேட்டு நெசவுக்கு ஒரு இருட்டு ஒரு வெளிச்சம்." "இந்த பிளஸ் மைனஸ் தத்துவந்தான் கம்ப்யூட்டருக்கே அடிப்படை." இருளைப் புகவிடுகிற பொழுதிலேயே ஒளியையும் தோற்றுவிப்பது எதுவோ? அதுவே தாவோ. இருள் இருந்தால்தானே ஒளி. ____________________ *பாரதி*சேக்கிழார்*பாரதிதாசன்*பிரேமிள்* *ஆதிமூலம்*ஒரு நெசவாளி*ஆர்.எம்.கே.வி. விஸ்வநாதன்* *பிரிட்ஜேஃப் காப்ரா*புதுமைப்பித்தன்*

3. எல்லாமாயும் உள்ள நான்

காலகாலமாய்க் காவுவாங்கிக் காத்திருக்கிறாள் 'லவ்கீஹா' அதிலும் கலைஞர்களிடம் விளையாடுவ தென்றால் கொள்ளை ஆசை அவளுக்கு. ஆயினும் அறிவின் குருவே ஞானிகள் கைஉதறிச் செல்வார்கள் காரல் மார்க்ஸ் உயிர்நீப்பதும் உயிர்த்தெழுவதும் காலகால நிகழ்வு தற்பொழுது அவருக்கு மரண காலம். கேரளத்தில் மார்க்ஸ் மரிச்சிட்டில்ல மார்க்ஸிசம் ஜனிச்சிட்டில்ல விடுபட்டுப்போன என் தத்துவமே நீ உதறிவிட்டுப்போன இளம் விரல்களால் உன் சிஷ்யன் (மாணவன்) அல்லது தோழன் உன்னை மீண்டும் மீண்டும் எழுதுவான். ஏராளமான கருத்தியல் எதிராளிகள் என்றாலும் தனிப்பட்ட எதிரியென எவருமிலர். "Well Marx Who is Marxist?" "Well, I don't know But I'm not" காந்தியம் என்று ஒன்றும் கிடையாது என்பேரால் நான் எந்த மதத்தையும் விட்டுப் போகவில்லை. "புத்தர் என்றால் என்ன?" "மூன்று பவுண்டு சணல்!" "ஒரு நாய்க்குப் புத்த இயல்பு உண்டா?" "மியூ" "மியூ" "And have grown Nameless and immeasurable No one I'm I who am all that is." _______________ *கீரனூர் ஜாகிர் ராஜா*ப.தேவேந்திர பூபதி* *சி...