தென்புலத்தின் திருஒளியே
இருள்செறிவார் மனப் புரிதல் மண்டும் ஜாதி எண்ணரிய களைகளெனக் கிண்டும் போதில் மருள்வெறியார் மதக்காட்டில் மடமைச் சேற்றில் அருள்நெறியே வாழ்வாகி கனிந்த நெஞ்சே ஆரியத்தால் சுடச்சுடரும் ஆடகப் பொன்னே தெருள்நெறியே இயற்கையென தெளிந்த பெம்மோய் தென்புலத்தின் திருஒளியே வள்ளல் அய்யா - பொதிகைச் சித்தர் 04-06-2018